நெமிலிச்சேரி
நெமிலிச்சேரி பசுமை நிறைந்த வயல்கள் சூழ்ந்த தொன்மையான கிராமம். நெமிலி என்றால் தெலுங்கில் மயில் என்று பொருள். நெமிலிகள் (மயில்கள்) அதிகமாக இருந்ததால் நெமிலிச் செருவு என்று அழைக்கப் பெற்று, நாளடைவில் அது நெமிலிச்சேரியாக மாறிற்று. இப்படியான பெயர் KA

ரணத்தோடு விளங்கும் நெமிலிச்சேரியில் ஆனந்தவல்லி சமேதராக அகஸ்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார். 950 ஆண்டுகளுக்கு முன் பதினெண் சித்தர்களில் ஒருவரான அகத்தியரால் உருவான ஆலயம் இது.
அன்றைய நாளில் நான்மறைகள் முறையாக ஓதப்பட்டு வழிபாடுகள் சிறப்பாக நடந்ததற்கு சான்றுகள் உள்ளன. பல்லவபுரமானது, வானவன் தேவி சதுர்தேவி மங்கலம் என்ற பெயரில் இருந்ததாக 11ம் நூற்றாண்டை ஒட்டிய சோழர் காலத்து கல்வெட்டு குறிப்பு ஒன்று கூறுகிறது. இன்னும் எழும்பூர் அருங்காட்சியகத்தில் அதற்கான கல்வெட்டு ஒன்று உள்ளதாக சொல்லப்படுகிறது. பல சித்தர்கள் இந்த இடத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். நெமிலிச்சேரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அகஸ்தீஸ்வரர் ஆலயத்திற்கு 1930ம் ஆண்டில் வாழ்ந்த கோடர் முனுசாமி என்பவர் ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் கும்பாபிஷேகத்தை நடத்தியிருக்கிறார்.
இந்த ஆலயத்தில் நந்தி மண்டபம், விநாயகர் மண்டபம், மகா மண்டபம், சூரியன், பைரவர், நவகிரகங்கள், கோஷ்ட தெய்வங்கள் என சிவாலயத்திற்குரிய எல்லா சந்நதிகளும் அமையப்பெற்றுள்ளன. கருவறையில் எழுந்தருளியிருக்கும் அஸ்தீஸ்வரரை வழிபட்டால் சர்க்கரை நோய் குணமாகும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. அகஸ்தியர், சித்த மருத்துவ முறைகளை வகுத்தவர்களில் தலையானவர். ஆயுர்வேத சூத்திரங்களுக்கு விரிவாக உரை எழுதியவர் அவர்.
அத்தகைய சிறப்புக்குரிய இவர் மக்கள் பலன் பெறும் வகையில் வெவ்வேறு நோய்களை குணமாக்கும் சக்திவாய்ந்த சிவ ஆலயங்களை தன்னுடைய யோக சக்தியால் உருவாக்கி பிரதிஷ்டை செய்திருக்கிறார். எப்படி போகர் சித்தர் நவபாஷாணத்தாலான பழநி ஆண்டவரை உருவாக்கினாரோ அதுபோல அகத்தியர் இந்த சிவலிங்கத்தை பிரத்யேகமான முறையில் உருவாக்கி இருக்கிறார். நோய்களை தீர்க்கவும், தடைகளை தகர்க்கவும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகின்ற நெமிலிச்சேரி அகஸ்தீஸ்வரரை வழிபட்டு அனைத்து நன்மைகளையும் பெறுவோமாக!
சென்னை - குரோம்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து கிழக்குப் பக்கம் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் நெமிலிச்சேரி அமைந்துள்ளது.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home