Friday, July 18, 2014

NAVAGRAHA MANTHRAMS JAPAMS

கர - அங்க - நியாஸங்கள்
1. கர - நியாசம் :
1. ஓம் ரச்மிமதே அங்குஷ்டாப்யாம் நம:
(ஆள்காட்டி விரலால் பெரு விரல்களைத் தொடுக)
2. ஓம் ஸமுத்யதே தர்ஜ நீப்யாம் நம:
(பெருவிரல்களால் ஆள் காட்டி விரல்களைத் தொடுக)
3. ஓம் தேவாசுர நமஸ்க்ருதே மத்ய மாப்யாம் நம:
(பெருவிரல்களால் நடுவிரல்களைத் தொடுக)
4. ஓம் விவஸ்வதே அநாமி காப்யாம் நம:
(பெருவிரல்களால் மோதிர விரல்களைத் தொடுக)
5. ஓம் பாஸ்கராய கநிஷ்டி காப்யாம் நம:
(பெருவிரல்களால் சிறுவிரல்களைத் தொடுக)
6. ஓம் புவனேஸ்வராய கரதல கரப்ருஷ் டாப்யாம் நம:
(இருகரங்களையும் கூட்டி உள்ளும் புறமும் தடவுக)
2. அங்க - நியாசம் :
1. ஓம் ரச்மிமதே ஹ்ருதயாய நம:
(பெருவிரலையும் - மோதிர விரலையும் கூட்டி மார்பு நடுவில் தொடுக)
2. ஓம் சமுத்யதே சிரசே ஸ்வாஹா.
(உச்சித் தலையைத் தொடுக)
3. ஓம் தேவாசுர நமஸ்க்ருதாய சிகாயை வஷட்.
(உச்சித் தலையில் முடி நுனியைத் தொடுக)
4. ஓம் விவஸ்வதே கவசாய ஹும்.
(உடலைச் சுற்றுக)
5. ஓம் பாஸ்கராய நேத்ராய வஷட்.
(நேத்திரத்தைத் தொடுக)
6. ஓம் புவனேஸ்வராய அஸ்திராய பட்.
(உடலைச் சுற்றி நொடிக்க)
7. ஓம் பூ: புவ: சுவ: ஓம்.
(உடலைச் சுற்றி எட்டுமுறை நொடிக்க)
3. தேக - நியாசம் :
ரச்மிமதே பீஜம்: சூர்யாய சக்தி நம: கீலகம்;
ஸர்வத்ர, ஜய சித்யர்த்தே, ஜபே விநியோக.
(உச்சிமுதல் உள்ளங்கால் வரை - இரு கரங்களாலும் - உடலைத் தொட்டுத் தடவுக)
அனுக்கை
நவக் கிரக பூஜா ஹோம க்ரியாயாம்;
ஆச்சார்ய முகேந க்ரியா கர்த்தும்;
அதிதேவதா - ப்ரத்யதி தேவதா;
ஸஹிதான்; ஆதித்யாதீன்
நவக்ர ஹான் யக்ஷ்யே;
யோக்யதா ஸித்திம் அநுக்ர ஹானாம்
சூரியன்
1. மூலமந்திரம்
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஸ: சிவ சூர்யாய நம:
2. காயத்ரி
அஸ்வத் வஜாய வித்மஹே; பத்மஹஸ்தாய தீமஹி;
தன்ன, சூர்ய ப்ரசோதயாத்
3. ஆசன - மூர்த்தி - மூலம்
ஓம் அம் அர்க்காச நாய நம:
ஓம் கம் கசோல்காய சூர்ய மூர்த்தயே நம:
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஸ: சிவ சூர்யாய நம:
4. தியான சுலோகம்
ஜபாகுசூம சங்காசம், காஷ்யபேயம் மஹாத்யுதிம்;
தமோரிம் ஸர்வபாபக்நம், ப்ரணதோஸ்மி திவாகரம்
5. ஆவாஹணம்
1. உதுத்யம் ஜாத வேதஸம்; தேவம் வஹந்தி கேதவ;
த்ரு சேவிச்வாய சூர்யம்  - (பூ வைக்க)
2. ஓம் ஸதேசம் ஸகோத்ரம், ஸ்ரூபம் ஸவர்ணம், ஸர்க்ஷிச் சந்தஸம்; அக்கினி அதிதேவதா, ருத்ர ப்ரத்யதி தேவதா ஸகிதம், பச்சிமாபி முகம், விருத்தாகார மண்டலே, ப்ரதிஷ்டிதம், பூர்புவஸ்வரோம், பகவந்தம், ஆதித்யம், ஆவாஹயாமி  - (சந்தனம் தடவுக)
3. ஆதித்யஸ்ய இத மாஸனம்  - (அட்சதை போடுக)
6. தோத்திரம்
காசினி இருளை நீக்கும் கதிரொளி ஆகி எங்கும்
பூசுர உலகோர் போற்றப் பொசிப்புடன் சுகத்தை நல்கும்;
வாசி ஏழுஉடைய தேர்மேல் மாகிரி வலமாய் வந்த
தேசிகா எனைஇரட் சிப்பாய் செங்கதிர்ச் செல்வா போற்றி
சந்திரன்
1. மூலமந்திரம்
ஓம் ஹ்ராம் க்லீம் சம் சந்திர தேவாய நம:
2. காயத்ரி
நிசாகராய வித்மஹே; கலாநாதாய தீமஹி;
தன்ன, சந்த்ர ப்ரசோதயாத்
3. ஆசன - மூர்த்தி - மூலம்
ஓம் ஹ்ராம் சந்த்ரா சாய நம:
ஓம் ஹ்ராம் சம் சந்திர மூர்த்தயே நம:
ஓம் ஹ்ராம் க்லீம் சம் சந்திர தேவாய நம:
4. தியான சுலோகம்
ததிசங்க துஷாராபம், க்ஷீரோதார்ணவ ஸம்பவம்;
நமாமி, சசிநம் ஸோமம்; சம்போர் மகுட பூஷணம்
5. ஆவாஹணம்
1. ஆப்யாயஸ்வ, ஸமேது தே, விச்வத; ஸோம
வ்ருஷ்ண்யம்; பவா வாஜஸ்ய ஸங்கதே - (பூ வைக்க)
2. ஓம் ஸதேசம் ஸகோத்ரம், ஸ்ரூபம் ஸ்வர்ணம், ஸர்க்ஷிச் சந்தஸம்; ஆப: அதிதேவதா, கௌரி ப்ரத்யதி தேவதா ஸகிதம்; பச்சிமாபி முகம், சதுரச்ராகார மண்டலே, ப்ரதிஷ்டிதம், பூர்புவ: ஸ்வரோம், பகவந்தம், ஸோமம், ஆவாஹயாமி - (சந்தனம் தடவுக)
3. ஸோமஸ்ய இத மாஸனம் - (அட்சதை போடுக)
6. தோத்திரம்
அலைகடல் அமுதம் தன்னோடு, அன்றுவந்து உதித்து, மிக்க
கலைவளர் திங்கள் ஆகிக் கடவுளோர்க்கு அமுதம்ஈயும்,
சிலைநுதல் உமையாள் பாகன் செஞ்சடைப்பிறையாய், மேரு
மலைவலமாக வந்த மதியமே போற்றி போற்றி
அங்காரகன்
1. மூலமந்திரம்
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் அம்அங்காரக தேவாய நம:
2. காயத்ரி
அங்காரகாய வித்மஹே; பூமி பாலாய தீமஹி;
தன்ன, குஜ ப்ரசோதயாத்
3. ஆசன - மூர்த்தி - மூலம்
ஓம் ஹ்ராம் அங்கார காய நம:
ஓம் ஹ்ராம் அம் அங்கார மூர்த்தயே நம:
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் அம் அங்காரக தேவாய நம:
4. தியான சுலோகம்
தரணீ கர்ப்ப ஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்;
குமாரம், சக்தி ஹஸ்தம், மங்களம், ப்ரணமாம்யஹம்
5. ஆவாஹணம்
1. அக்னிர் மூர்த்தா திவ: ககுத் பதி; ப்ருதிவ்யா அயம்;
அபாம் ரேதாம்ஸி ஜின்வதி  - (பூ வைக்க)
2. ஓம் ஸதேசம் ஸகோத்ரம், ஸ்ரூபம் ஸவர்ணம், ஸர்க்ஷிச் சந்தஸம்; பூதேவி அதிதேவதா, சேத்திரபால ப்ரத்யதி தேவதா ஸகிதம்; பச்சிமாபி முகம், த்ரிகோணாகார மண்டலே, ப்ரதிஷ்டிதம், பூர்புவ: ஸ்வரோம், பகவந்தம், அங்காரஹம், ஆவாஹயாமி - (சந்தனம் தடவுக)
3. அங்காரகஸ்ய இத மாஸனம் - (அட்சதை போடுக)
6. தோத்திரம்
வசனம், நல்தைரியம், திறம் மன்னவர் சபையில் வார்த்தை
புசபலம், பராக் கிரமங்கள், போர்தனில் வெற்றி, ஆண்மை,
நிசமுடன் அவர் அவர்க்கு, நீள்நிலம் தன்னில் நல்கும்,
குசன் நிலமகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி
புதன்
1. மூலமந்திரம்
ஓம் ஹ்ராம் ஐம் பும் புததேவாய நம:
2. காயத்ரி
ஆத்ரேசயாய வித்மஹே; இந்து புத்ராய தீமஹி;
தன்ன, புத ப்ரசோதயாத்
3. ஆசன - மூர்த்தி - மூலம்
ஓம் ஹ்ராம் புத ஆசனாய நம:
ஓம் ஹ்ராம் பும் புதமூர்த்தயே நம:
ஓம் ஹ்ராம் ஐம் பும் புத தேவாய நம:
4. தியான சுலோகம்
ப்ரியங்கு கலிகா ஸ்யாமம்; ரூபேணா ப்ரத்திமம் புதம்;
ஸெளம்யம் ஸெளம்ய குணோபேதம்; தம் புதம் ப்ரணமாம்யஹம்
5. ஆவாஹணம்
1. ப்ரம்ம ஜஜ்ஞானம், ப்ரதமம், புரஸ்தாத், விஸீமத:
சூருசோவேந ஆவஹ; ஸபுதன்யா, - உபமா
அஸ்யவிஷ்டா ஸதச்சயோனிம், அஸதச்ச விவ: - ( பூ வைக்க)
2. ஓம் ஸதேசம் ஸகோத்ரம், ஸ்ரூபம் ஸவர்ணம், ஸர்க்ஷிச் சந்தஸம்; விஷ்ணு அதிதேவதா, நாராயண ப்ரத்யதி தேவதா ஸகிதம்; உத்தராபி முகம், பாணாகார மண்டலே, ப்ரதிஷ்டிதம், பூர்புவ: ஸ்வரோம், பகவந்தம், புதம், ஆவாஹயாமி  - (சந்தனம் தடவுக)
3. புதஸ்ய இத மாஸனம் - (அட்சதை போடுக)
6. தோத்திரம்
மதனநூல் முதலாய் உள்ள மறைகளும், கல்வி, ஞானம்,
விதமுடன் அவர் அவர்க்கு விஞ்சைகள் அருள்வோன், திங்கள்
சுதன், பவிசுபாக்கி யங்கள், சுகம்பல கொடுக்க வல்லான்,
புதன் கவிப்புலவன் சீர்சால் பூங்கழல் போற்றி போற்றி
குரு (வியாழன்)
1. மூலமந்திரம்
ஓம் ஹ்ராம் ஸ்ரீம் கும் குருதேவாய நம:
2. காயத்ரி
ஆங்கீரஸாய வித்மஹே; சராசார்யாய தீமஹி;
தன்ன, குரு ப்ரசோதயாத்
3. ஆசன - மூர்த்தி - மூலம்
ஓம் ஹ்ராம் குரு ஆசனாய நம:
ஓம் ஹ்ராம் கும் குருமூர்த்தயே நம:
ஓம் ஹ்ராம் ஸ்ரீம் கும் குருதேவாய நம:
4. தியான சுலோகம்
தேவா நாஞ்ச ரிஷீணாஞ்ச, குரும் காஞ்சந ஸந்நிபம்;
பக்தி பூதம் த்ரிலோகேசம்; தம் நமாமி ப்ருஹஸ்பதிம்
5. ஆவாஹணம்
1. ப்ருஹஸ்பதே, பரிதீயா; ரதேன; ர÷க்ஷõஹா மித்ராம்;
அபபாத மான: ப்ரபஞ்ஜ ஜன்த்ஸேனா, ப்ரம்ருணோ, யுதா
ஜயன்; அஸ்மாக மேத்யவிதாரதானாம்  -(பூ வைக்க)
2. ஓம் ஸதேசம் ஸகோத்ரம், ஸ்ரூபம் ஸவர்ணம், ஸர்க்ஷிச் சந்தஸம்; பிரம்ம அதிதேவதா, இந்திர ப்ரத்யதி தேவதா ஸகிதம்; பூர்வாபி முகம், தீர்க்க சதுரச்ராகார மண்டலே; ப்ரதிஷ்டிதம், பூர்புவ: ஸ்வரோம், பகவந்தம், ப்ருஹஸ்பதிம், ஆவாஹயாமி - (சந்தனம் தடவுக)
3. ப்ருஹஸ்பதே இத மாஸனம் - (அட்சதை போடுக)
6. தோத்திரம்
மறைமிகு கலைநூல் வல்லோன்; வானவர்க்கு அரசன்மந்திரி
நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக்கு அதிபன் ஆக்கி;
நிறைதனம் சிவிகை, மன்றல், நீடுபோ கத்தை நல்கும்;
இறையவன், குரு வியாழன்; இணையடி போற்றி போற்றி
சுக்கிரன் (வெள்ளி)
1. மூலமந்திரம்
ஓம் ஹ்ராம் ஸ்ரீம் சும் சுக்கிரதேவாய நம:
2. காயத்ரி
ரஜதாபாய வித்மஹே; ப்ருகு சுதாய தீமஹி;
தன்ன, சுக்கிர ப்ரசோதயாத்
3. ஆசன - மூர்த்தி - மூலம்
ஓம் ஹ்ராம் சுக்கிர ஆசனாய நம:
ஓம் ஹ்ராம் சும் சுக்கிரமூர்த்தயே நம:
ஓம் ஹ்ராம் ஸ்ரீம் சும் சுக்கிரதேவாய நம:
4. தியான சுலோகம்
ஹிமகுந்த ம்ருணாலாபம்; தைத்யாநாம் பரமம்குரும்:
ஸர்வசாஸ்த்ர ப்ரவக்தாரம்; பார்கவம் ப்ரணமாம்யஹம்
5. ஆவாஹணம்
1.அஸ்ய ப்ரத்னாமனுத்யுதம் சுக்ரம் துதுஹ்ரே
அஹ்ரய; பய: ஸஹஸ்ர ஸாம்ஷிரும் - (பூ வைக்க)
2. ஓம் ஸதேசம் ஸகோத்ரம், ஸ்ரூபம் ஸவர்ணம், ஸர்க்ஷிச் சந்தஸம், இந்திராணி அதிதேவதா, தந்வந்ரி ப்ரத்யதி தேவதா ஸகிதம்; தக்ஷ்ணாபி முகம், பஞ்ச கோணாகார மண்டலே; ப்ரதிஷ்டிதம், பூர்புவ: ஸ்வரோம், பகவந்தம், சுக்ரம் ஆவாஹயாமி - (சந்தனம் தடவுக)
3. சுக்ரஸ்ய இத மாஸனம்  - (அட்சதை போடுக)
6. தோத்திரம்
மூர்க்கவான் சூரன் வாணன் முதலினோர் குருவாய், வையம்
காக்கவான் மழைபெய் விக்கும் கவிமகன், கனகம் ஈவோன்;
தீர்க்க வானவர்கள் போற்ற; செத்தவர் தமை எழுப்பும்;
பார்க்கவன் சுக்ராச் சாரி, பாத பங்கயமே போற்றி
சனி
1. மூலமந்திரம்
ஓம் ஹ்ராம் ஸ்ரம் சன் சனீஸ்வர தேவாய நம:
2. காயத்ரி
பங்கு பாதாய வித்மஹே; சூர்ய புத்ராய தீமஹி;
தன்ன, மந்த: ப்ரசோதயாத்
3. ஆசன - மூர்த்தி - மூலம்
ஓம் ஹ்ராம் சனீஸ்வர ஆசனாய நம:
ஓம் ஹ்ராம் சன் சனீஸ்வரமூர்த்தயே நம:
ஓம் ஹ்ராம் ஸ்ரம் சன் சனீஸ்வர தேவாய நம:
4. தியான சுலோகம்
நீலாஞ்ஜந ஸமாபாசம்; ரவிபுத்ரம் யமாக்ரஜம்;
சாயாமார்த்தாண்ட ஸம்பூதம்; தம்நமாமி சனீஸ்சரம்
5. ஆவாஹணம்
1. சந்நோ தேவி அபிஷ்டயே; சன்னோ பவந்து பீதயே;
சம்யோ அபிஸ்ர வந்துந - (பூ வைக்க)
2. ஓம் ஸதேசம் ஸகோத்ரம், ஸ்ரூபம் ஸ்வர்ணம், ஸர்க்ஷிச், சந்தஸம்; இயம அதிதேவதா, ப்ரஜாபதி ப்ரத்யதி தேவதா ஸகிதம்; பூர்வாபி முகம்; தனுராகார மண்டலே; ப்ரதிஷ்டிதம், பூர்புவ: ஸ்வரோம், பகவந்தம், சனீஸ்சரம் ஆவாஹயாமி - (சந்தனம் தடவுக)
3. சனீஸ்சரஸ்ய இத மாஸனம் - (அட்சதை போடுக)
6. தோத்திரம்
முனிவர்கள் தேவர் ஏனை மூர்த்திகள் முதலா னோர்கள்;
மனிதர்கள் சகல வாழ்வும், உன்மகிமை அல்லால் வேறு முண்டோ,
கனிவுள தெய்வம் நீயே; கதிர்சேயே, காகம் ஏறும்
சனிபகவானே போற்றி, தமியனேற்கு அருள் செய்வாயே
இராகு
1. மூலமந்திரம்
ஓம் ஹ்ராம் ஹ்ரூம் ரம் இராகு தேவாய நம:
2. காயத்ரி
சூக தந்தாய வித்மஹே; உக்ரரூபாய தீமஹி;
தன்ன, ராகு ப்ரசோதயாத்
3. ஆசன - மூர்த்தி - மூலம்
ஓம் ஹ்ராம் இராகு ஆசனாய நம:
ஓம் ஹ்ராம் ரம் ராகு மூர்த்தயே நம:
ஓம் ஹ்ராம் ஹ்ரூம் ரம் இராகு தேவாய நம:
4. தியான சுலோகம்
அர்த்தகாயம் மஹாவீர்யம்; சந்த்ராதித்ய விமர்தநம்;
ஸிம்ஷிகாகர்ப்ப ஸம்பூதம்; தம்ராகும் ப்ரணமாம்யஹம்
5. ஆவாஹணம்
1. கயாந சித்ர ஆபூவத், ஊதீஸ தாவ்ருத ஸகா;
கயா, சசிஷ்டயா, வ்ருதா - (பூ வைக்க)
2. ஓம் ஸதேசம் ஸகோத்ரம், ஸ்ரூபம் ஸவர்ணம், ஸர்க்ஷிச் சந்தஸம்; ஸர்ப அதிதேவதா, நிருதி ப்ரத்யதி தேவதா ஸகிதம்; பூர்வாபி முகம்; சூர்ப்பாகார மண்டலே; ப்ரதிஷ்டிதம், பூர்புவ: ஸ்வரோம், பகவந்தம், ராஹும் ஆவாஹயாமி - (சந்தனம் தடவுக)
3. ராஹோ இத மாஸனம் - (அட்சதை போடுக)
6. தோத்திரம்
வாகுசேர் நெடுமால் முன்னம், வானவர்க்கு அமுதம் ஈய;
ஏகிநீ நடுவி ருக்க; எழில்சிரம் அற்று; பின்னர்,
நாகத்தின் உடலோடு, உன்றன், நற்சிரம் வாய்க்கப் பெற்ற;
இராகுவே போற்றி போற்றி; இரட்சிப்பாய் இரட்சிப்பாயே
கேது
1. மூலமந்திரம்
ஓம் ஹ்ராம் தும் கம் கேது தேவாய நம:
2. காயத்ரி
சித்ர வர்ணாய வித்மஹே; ஸர்ப்பரூபாய தீமஹி;
தன்ன, கேது ப்ரசோதயாத்
3. ஆசன - மூர்த்தி - மூலம்
ஓம் ஹ்ராம் கேது ஆசனாய நம:
ஓம் ஹ்ராம் கம் கேது மூர்த்தயே நம:
ஓம் ஹ்ராம் தும் கம் கேது தேவாய நம:
4. தியான சுலோகம்
பலாச புஷ்ப ஸங்காசம்; தாரகா க்ரஹ மஸ்தகம்;
ரௌத்ரம், ரௌத்ராத்மகம், கோரம், தம்கேதும் ப்ரணமாம்யஹம்
5. ஆவாஹணம்
1. கேதும், க்ருண் வன்னகேதவே, பேசோமர்ய அபேசலே;
ஸமுஷத்பி, அஜாயதா - (பூ வைக்க)
2. ஓம் ஸதேசம் ஸகோத்ரம், ஸ்ரூபம் ஸவர்ணம், ஸர்க்ஷிச் சந்தஸம்; சித்ரகுப்தா அதிதேவதா, ப்ரஹ்மா ப்ரத்யதி தேவதா ஸகிதம்; பச்சிமாபி முகம்; துவஜாகார மண்டலே, ப்ரதிஷ்டிதம், பூர்புவ: ஸ்வரோம், பகவந்தம், கேதும் ஆவாஹயாமி - (சந்தனம் தடவுக)
3. கேதோ இத மாஸனம் - (அட்சதை போடுக)
6. தோத்திரம்
மாதுரு நெடுமால் முன்னம், வானவர்க்கு அமுதம் ஈயும்
போதுநீ, நடுவிருக்கப், புகழ்சிரம் அற்று; பின்னர்,
ஓதுறும் அரச நாகம், உயர்சிரம் ஐந்து பெற்ற
கேதுவே, போற்றி போற்றி, கீர்த்தியாய் இரட்சிப் பாயே
சமித்து - அன்ன - ஆஜ்ய ஹோமம்
(கீழ்க்கண்ட ஹோம மந்திரங்களைக் கூறி - தனித்தனியே ஒவ்வொரு தடவை - சமித்து, அன்னம் நெய் - முதலியவைகளால் ஆகுதி செய்யவும்)
1. சூரியன்
உதுத்யம் ஜாதவேதஸம், தேவம் வஹந்தி கேதவ;
த்ருசே விச்வாய ஸூர்யம் ஸ்வாஹா
சூர்யாய இதம் நமம
2. சந்திரன்
ஆப்யாயஸ்வ ஸமேதுதே விச்வத: ஸோம
வ்ருஷ்ண்யம்; பவா வாஜஸ்ய ஸங்கதே ஸ்வாஹா
ஸோமாய இதம் நமம
3. அங்காரகன்
அக்னிர் மூர்த்தா திவ: ககுத் பதி; ப்ருதிவ்யா;
அயம், அபாம் ரே தாம்ஸி, ஜின்வதி ஸ்வாஹா
அங்காரகாய இதம் நமம
4. புதன்
ப்ரம்ஹ ஜஜ்ஞானம், ப்ரதமம் புரஸ்தாத் விஸீமத,
சூருச, வேத ஆவ:, ஸபுதன்யா, உபமா, அஸ்ய
விஷ்டா, ஸதச யோனிம், அஸ்தச்ச விவ: ஸ்வாஹா
புதாய இதம் நமம
5. குரு-ப்ரஹஸ்பதி-வியாழன்
ப்ருஹஸ்பதே, பரிதீயா ரதேன, ர÷க்ஷõஹாமித்ராம்,
அப்பாதமான; ப்ரபஞ்சன் த்ஸேனா; ப்ரம்ருணோயுதா,
ஜயன் அஸ்மாகம் ஏதி, அவிதா ரதானாம் ஸ்வாஹா
ப்ருஹஸ்பதயே இதம் நமம
6. சுக்கிரன் - வெள்ளி
அஸ்ய, ப்ரத்நாமனுத்யுதம்; சுக்ரம், துதுஹ்ரே,
அஹ்ரய, பய:, ஸஹஸ்ரஸாம் ரிஷிம் ஸ்வாஹா
சுக்ராய இதம் நமம
7. சனி
சன்னோ தேவி அபிஷ்டயே; சன்னோ பவந்து பீதயே;
சம்யோ; அபிஸ்ரவந்து ந: ஸ்வாஹா
சனைச் சராய இதம் நமம
8. இராகு
கயா ந: சித்ர ஆபுவத் ஊதீஸ: தாவ்ருத: ஸகா;
கயா சசிஷ்டயா, ஸ்ருதா ஸ்வாஹா
ராகவே இதம் நமம
9. கேது
கேதும், க்ருண்வன்னகேதவே; பேசோமர்யா,
அபேசஸே, ஸமுஷத்பி, அஜாயதா ஸ்வாஹா
கேதவே இதம் நமம
ஹோம மந்த்ரம்
அக்னயே ஸ்விஷ்டக்
ருதே ஸ்வாஹா
அக்னயே ஸ்விஷ்டக்
ருதே - இதம் நமம
யதா ஸ்தான மந்திரம்
யஜ்ஞேன யஜ்ஞம் அயஜந்த தேவா; தாணி தர்மாணி;
ப்ரத மான் யாஸன்; தேஹ நாகம் மஹி மான; ஸசந்தே-
யத்ர பூர்வே - ஸாத்யா - ஸந்தி தேவா
ஆவாஹிதா - நவக்ரஹ தேவதா; நக்ஷத்ர தேவதா - வருணம்ச;
யதா ஸ்தானம் - ப்ரதிஷ்டாப யாமி
ஆவாஹித சுலோகம்
ஆதித்யாதி நவக்ரஹ தேவ தாப்யோ நம:
ஆவாஹித நக்ஷத்ர தேவ தாப்யோ நம:
என்று சூர்ய ஆவாஹிதியின் முன்பும், கேது ஆவாஹிதியின் பின்பும் கூறுக.
ப்ராசன மந்திரம்
(இறுதியில் தீர்த்தம் தரும்போது)
அகால ம்ருத்யு ஹரணம்; ஸர்வ வ்யாதி நிவாரணம்;
சமஸ்த பாப க்ஷயகரம்; நவக்கிரஹ தேவதா;
பாதோதகம் - பாவணம் - சுபகரம்
மங்கள சுலோகம்
(இறுதியில் கூறுக)
1. ஆதித்ய இருதயம் புண்யம்
ஸர்வ சத்ரு விநாசநம்;
ஜயாவஹம் ஜபே நித்யம்
அக்ஷய்யம் பரமம் சிவம்.
2. ஸர்வமங்கல மாங்கல்யம்
ஸர்வபாப ப்ரணாசநம்
சித்தாசோக ப்ரசமனம்
ஆயுர்வர்த்தன முத்தமம்.
3. ரச்மிமந்தம் ஸமுத்யந்தம்
தேவாசுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம்
பாஸ்கரம் புவனேஸ்வரம்.
நட்சத்திர - சாந்தி - ஹோமம்
இருபத்தேழு நட்சத்திரங்களும் - அதற்குரிய அதிதேவதைகளும்; அவைகளுக்கான ஆவாகனங்களும்; மந்திரங்களும் உள்ளன. தேவையானால் விரிவாகச் செய்ய விரும்பினால், அதைப் பார்த்துச் செய்து கொள்ளவும்.
நவக்கிரக நாயகர்களின் சுருக்க வரலாறு
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் - நிலை பெறுத்தலும்-நீக்கலும் நீங்கலா-அலகு இலா விளையாட்டு உடை-அன்னவராகிய பரமசிவன்-உலகத் தோற்றத்தின் போது முதன் முதல்-பிரணவத்தின் சொரூபமாகச் சூரியனைத் தோற்றுவித்தார். ஆதியில் (முதலில்) தோன்றியதால் அவன் ஆதித்தன் - என்று பெயர் பெற்றான்.
சூரியன் நவ நாயகர்களின் தலைவன். சுபக்கிரகன். தன்னை வழிபடுவோருக்கு உடல் நலம்-நீண்ட ஆயுள் - கண் நோய் நீக்கம் முதலியன கொடுத்தருளுவான்.
சந்திரன் தேவர்களும் அசுரர்களும், பாற்கடலைக் கடைந்த போது, காமதேனு-கற்பக விருட்சம்-மகாலட்சுமி முதலியோர்களுடன் தோன்றியவன். சாத்வீக குணம் உடையவன். பராசக்தியின் அம்சமாக இருப்பவன். தன்னை வழிபடுவோர்க்கு அழகு-நற்போகம்-சிறந்த குணம் முதலியவைகளை வழங்குவான்.
செவ்வாய் சிவபெருமானின் நெற்றிக் கண்ணினின்றும் தோன்றிய நீர்த்திவலையிலிருந்து தோன்றியவன். அக்கண்ணிலிருந்தும் தோன்றிய தீப்பொறியில் உற்பவித்த சரவணபவனின் அம்சமானவன். செம்மை நிறத்தவன். ஆகவே செவ்வாய் என அழைக்கப்பட்டான். இராஜச குணத்தவன். தன்னைத் துதிப்போர்க்கு உடல்வலிமை-மனத்திட்பம்-பேச்சாற்றல் முதலியன அருளுவான்.
புதன் பாற்கடலில் உற்பவித்த சந்திரனுக்கும்-தாரைக்கும் திருமகனாகத் தோன்றியவன் புதன். இவர் மகாஞானி, சுபக்கிரகர், சாந்தகுண சீலர், தன்னைத் துதிப்போர்க்கு அறினு-சாதுர்யம்-ஞானம் முதலியவற்றை அருளுவான். ஸ்ரீ மகா விஷ்ணுவின் அம்சம்.
வியாழன் ஆங்கீரச முனிவருக்கும்-வசுதா தேவிக்கும் திருமகனாகத் தோன்றியவர் குரு. இந்திரனுக்கு அமைச்சர் தேவர்களின் ஆசான், சாத்வீக குணமுடையவர். சுபக்கிரகர், பொன்னைப் போன்ற மஞ்சள் நிறமுடையவராகையால் பொன்னன் என்ற வியாழன் ஆனார். தன்னைத் தொழுவோர்க்கு மக்கட்பேறு-உயர்பதவி-மனமகிழ்ச்சி முதலியன அருளுவார். இவர் தட்சிணா மூர்த்தியின் அம்சம்.
வெள்ளி பிருகு முனிவருக்கும்-புலோசமை தேவிக்கும் திருமகனாகத் தோன்றியவர் சுக்கிரர். வெண்மையான நிறம் உடையவராகையால் வெள்ளி எனப் பெயர் பெற்றார். அசுரர்களின் குரு. கலாரசிகர்-சகலகலாவல்லவர்-மாபெரும் கவிஞர். சுபக்கிரகர். இவர் ஸ்ரீ ராஜராஜேச்வரியின் அம்சம். எனவே, தன்னைத் தொழுவோர்க்கு நல்ல மனை-நற்புகழ்-நற்போகம் முதலியன அருளுவார்.
சனி சூரியனுக்கும் - சாயா தேவிக்கும் திருக்குமரனாக அவதரித்தவர். கரிய நிறமுடையவர். ஆகவே காரி எனப்படும் சனி எனப் பெயர் பெற்றார். இவரது மகனே குளிகன் ஆவான். தாமச குணமுள்ளவர். ஒருவரின் வாழ்நாளில் அதிக காலம் இருப்பவர் இவரேயாவார். இவர் ஆயுள்காரகர். ஸ்ரீ ஆஞ்சநேயரின் அம்சம். தன்னை வணங்குவோர்க்கு நீண்ட வாழ்நாள்-நோய் நீக்கம்-வறுமையினின்றும் விடுபடுதல் முதலியன வழங்குவார்.
இராகு, கேது விப்ர சித்தி என்ற அசுரனுக்கும்-சிம்மிகை என்ற அசுரமாதுக்கும் தோன்றியவர். பாற்கடலினின்றும் கிடைத்த அமுதத்தை-மகாவிஷ்ணு-அசுரர்களை-மோகினி உருக் கொண்டு வஞ்சித்து-தேவர்களுக்கு வழங்கிய போது அவர் மாயையினின்றும் தப்பித்து-அமுதம் உண்டவர். எனவே அவரால் தலை துண்டிக்கப்பட்டவர். அமுதம் உண்ட காரணத்தால்-தலைவேறு உருவமாகவும்-உடல்வேறு உருவமாகவும் வளர்ந்தவர். தலை இராகு எனப் பெயர் பெற்றது. உடல் கேது எனப் பெயர் பெற்றது. விஷ்ணுவானவர் வேறு வழியின்றி-அருகு இருந்த நாகம் ஒன்றை இருகூறாக்கி-உடலை இராகுவிற்கும்-தலையை கேதுவிற்கும் வழங்கினார்.
இவர்கள் துர்க்கை மற்றும் நாகராஜன் அம்சம். இராகு தன்னை வணங்குவோர்க்கு நரம்பு சம்பந்தப்பட்ட நோயை நீக்குவார்; கேதுவோ தன்னைத் துதிப்போர்க்கு ஞானம்-வெற்றி முதலியன வழங்குவார்.


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home